''மகளிர் இட ஒதுக்கீடு; உயர் சாதியினருக்கு மட்டுமே பலன்'' கேஎஸ் அழகிரி!

''மகளிர் இட ஒதுக்கீடு; உயர் சாதியினருக்கு மட்டுமே பலன் அளிக்கும் என   இந்திய தேசிய காங்கிரசின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் திண்டுக்கல் தேனி காங்கிரஸ் கட்சியினரின் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ரகு வீராரெட்டி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே எஸ் அழகிரி, நாடாளுமன்றத்தை தனது ஆளுமையின் கீழ் கொண்டுவர நினைக்கிறார் மோடி. தொகுதி வரையறைக்கு உட்பட்டு இட ஒதுக்கீடு கொண்டுவர தந்திரம் செய்கின்றனர்.

தொகுதி மறுவரறையின் மூலம் தென்மாநிலங்கள் நான்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேவையில்லை என நினைக்கின்றன. வட மாநிலங்களான மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட ஏழு இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமே பாரதிய ஜனதா கட்சிக்கு போதும் என்று நினைக்கிறார்கள். புதியதாக,120 தொகுதிகள் வடமாநிலங்களில் அதிகப்படுத்தி அதன் மூலம் பலனடைய நினைக்கிறார்கள். இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு தென் மாநிலங்கள் தேவையில்லை என்பது நிருபனமாகியுள்ளது. 

தொடர்ந்து பேசிய அவர், மகளிர்  இட ஒதுக்கீடு விவகாரத்தில் நிறைய முரண்பாடுகள் உள்ளது. இதில் பலன் அடையப்போவது உயர்ந்த ஜாதியினர் மட்டுமே. மகளிர் இட ஒதுக்கீட்டில் ஓபிசி, SC இடம் பெறும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். அதில் எஸ் சி, எஃப் சி எவ்வளவு இருக்கின்றனர் என்ற கணக்கு இல்லை. அது இல்லாமல் எப்படி இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க: 2 வாரங்களுக்கு இபிஎஸ் பற்றி உதயநிதி பேசக் கூடாது!!