2-வது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை... மழைநீரில் தத்தளிக்கும் சென்னைவாசிகள்...

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2-வது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை... மழைநீரில் தத்தளிக்கும் சென்னைவாசிகள்...

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 70 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.