4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்... ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணம்...

மேட்டுப்பாளையம்-உதகை இடையே 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்... ஊட்டி மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் பயணம்...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரெயிலில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து, மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசிப்பார்கள். ஆனால் கொரோனா வைரஸ் 2-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி முதல் மலை ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள காரணத்தால், இன்று முதல் மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயிலில், பயணிகள் 105 பேர் உற்சாகமாக பயணம் செய்தனர். 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.