பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம்: ஓய்வுபெற்ற  நீதிபதி முருகேசன் ஆய்வுக்குழு பரிந்துரை

பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஓய்வுபெற்ற  நீதிபதி முருகேசன் ஆய்வுக்குழு  தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம்:  ஓய்வுபெற்ற  நீதிபதி முருகேசன் ஆய்வுக்குழு பரிந்துரை
பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.  இந்த குழு கடந்த ஒரு மாத காலமாக ஆராய்ந்த நிலையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
 
 84 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ள முருகேசன் குழு ,தொழிற்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது..பள்ளிகளை மேம்படுத்துதல், மாணவர்களுக்கான கல்வியை மேம்படுத்துவது குறித்தும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தங்களது அறிக்கையை முழுவதும் படித்துப் பார்த்த முதலமைச்சர், விரைந்து உத்தரவு பிறப்பிப்பதாக  உறுதி அளித்திருப்பதாக   ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.