மேலும் மேலும் சுமையை ஏற்றும் மத்திய அரசு... ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு...

சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு அனைத்துத்தரப்பு பொதுமக்களுக்கு சுமையை கொடுத்துள்ளது என்று ஜி.கே. வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் மேலும் சுமையை ஏற்றும் மத்திய அரசு... ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு...

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி தேர்தல் குறித்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த அக்கட்சி தலைவர் ஜி.கே வாசன் முன்னதாக செய்தியாளர் சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் ஆறு குளங்கள் போன்றவர்களை பாதுகாத்து நீர்த்தேக்கங்களை அரசு கண்காணிக்க வேண்டும் என ஜி கே வாசன் கேட்டுக்கொண்டார்.

மேலும் கிடப்பில் போட்டுள்ள அவசியமான அவசரமான சாலையான விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணியை காலக்கெடுவுக்குள் தரமாக அமைப்பு முடிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை ஜி கே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளையும் சட்டசபையில் தற்போது அறிவித்துள்ள அறிவிப்புகளையும் செயல்படுத்த வேண்டும் எனவும் ஜி.கே. வாசன் கேட்டுக்கொண்டார். சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு சாமானிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசு சுமையை ஏற்படுத்தி உள்ளது எனவும் ஜி.கே.வாசன் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.