
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள உணவகம், மருந்து கடை, இறைச்சி கடை உள்ளிட்ட 6 கடைகளின் இரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
அதன்பின்னர் காலையில் வழக்கம்போல் கடை தி்றக்க வந்த உரிமையாளர்கள் கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ர்சியடைந்தனர். அதில் இறைச்சி கடையில் இருந்த ரூ. 1.20 லட்சம் மற்றும் சிசிடிவி கேமிரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக சின்னாளப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மூலம் கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், ஐந்து கடைகளில் கொள்ளையடித்து சென்ற கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.