திமுக ஆட்சிக்கு வந்த பின் ரூ.600 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 600 கோடி ரூபாய் மதிப்பிலான அக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர்   சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி மைதானத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் 1700 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் அமைச்சர் பி.கே சேகர் பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர் சேகர் பாபு கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின்  முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

தினமும் ஒன்றிரண்டு இடங்களிலாவது கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும், திமுக அட்சியேற்ற பிறகு 600கோடி ரூபாய் மதிப்பிலான இடங்களை மீட்டுள்ளதாகவும் சேகர்பாபு  கூறினார்.