அரசு விழாவில் அமைச்சரின் பேச்சை கண்டு கொள்ளாத ஆளும் கட்சி எம்எல்ஏக்கள். அமைச்சர் ஆதரவாளர்களிடையே சலசலப்பு.

அரசு விழாவில் அமைச்சரின் பேச்சை கண்டு கொள்ளாத ஆளும் கட்சி எம்எல்ஏக்கள். அமைச்சர் ஆதரவாளர்களிடையே சலசலப்பு.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

மேலும் படிக்க |இசுலாமிய சிறைவாசிகள் உள்பட 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்! - வேல்முருகன் அறிக்கை

திராவிட ஆட்சியில் விலையில்ல நலத்திட்ட உதவிகள்


ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கி பேசுகையில், திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.  விதவை மறுமண நிதி உதவி திட்டம்,  கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் கடனுதவி என பெண்களுக்கென பல எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டம்  நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும்  முழுமையாக குடிநீர் வழங்க முடியவில்லை. இராமநாதபுரம் மாவட்டத்திற்கென தனி கூட்டு குடிநீர் திட்டம் வழங்க அறிவித்து  ரூ.2ஆயிரத்து500 கோடி நிதி ஒதுக்கீடுசெய்து  காவிரி ஆற்றுப்பகுதியில் தனியாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேறும். என்றார்
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் இராம.கருமாணிக்கம் செ.முருகேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | சுற்றுப் பகுதியில் இருந்து 200 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

முன்னதாக மாவட்ட  ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றிய நிலையில்  அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்புரை ஆற்றினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்  ஊராட்சி பிரநிதிகள் சிரித்து  பேசியபடியே இருந்தனர். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்ட மன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இருவருக்கும் பனிப்போர் இருந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அமைச்சரின் பேச்சை மேடையில் அமர்ந்திருப்பவர்கள் கண்டுகொள்ளாமல்  இருந்தது    அமைச்சரின் ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.