அரசு பணிகளை பார்க்காமல்...ஈரோட்டில் தான் முகாமிட்டுள்ளனர்...பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

அரசு பணிகளை பார்க்காமல்...ஈரோட்டில் தான் முகாமிட்டுள்ளனர்...பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

அரசு பணிகளை பார்க்காமல் அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாதக என 4 முனை போட்டி நிலவி வருகிறது. 

ஆளும் திமுகவிற்கு இந்த இடைத்தேர்தல் முக்கியம் வாய்ந்ததாக இருக்க கூடிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் திமுக கூட்டணி கட்சியான விசிக, மதிமுக தலைவர்களை சந்தித்ததோடு, மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரினார். இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து திமுக அமைச்சர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அரசு பணிகளை பார்க்காமல் அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர்கள் பணப்பட்டு வாடாவில் ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றார். மேலும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் புகார் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com