தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு என்பது வதந்தி.. மக்கள் யாரும் நம்பவேண்டாம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு என்பது வதந்தி.. மக்கள் யாரும் நம்பவேண்டாம் - அமைச்சர்  எஸ்.எஸ்.சிவசங்கர்

பெரம்பலூர் அருகே புதியவழித்திடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தை அமைச்சர்  சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளி மாநிலங்களுக்கான அரசு பேருந்து போக்குவரத்துக்கான கட்டண விகிதத்தை ஆராய்ந்து கட்டண உயர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்,  கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருவதாகவும், அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.