துருப்பிடித்து கிடக்கும் போக்குவரத்து துறை: சரியாக்க 3 மாதங்கள் ஆகும்…  

துருப்பிடித்து கிடக்கும் தமிழக போக்குவரத்து துறையை சரி செய்ய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
துருப்பிடித்து கிடக்கும் போக்குவரத்து துறை: சரியாக்க 3 மாதங்கள் ஆகும்…   
Published on
Updated on
1 min read

துருப்பிடித்து கிடக்கும் தமிழக போக்குவரத்து துறையை சரி செய்ய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இதனை தெரிவித்தார். அரசு போக்குவரத்து கழகம் 42 ஆயிரத்து 184  கோடி ரூபாய் அளவுக்கு  நஷ்டத்தில் இயங்குவதாக ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

பெண்கள்  இலவச பயணத்திற்காக தமிழக அரசு  1400 கோடி ரூபாய் மானியம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராஜகண்ணப்பன், போக்குவரத்து கழங்களில் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக பேருந்துகளை சுத்தம் செய்யும் செலவை குறைத்துள்ளதாக கூறினார்.

மேலும் ஜெர்மன் கடன் உதவியில் 2215 புதிய பேருந்துகள் மற்றும் 500 எலக்ட்ரிக் பேருந்துகள்  வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவம் அமைச்சர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com