நீட் தேர்வு தேதியை மாற்றக்கோரிய வழக்கு: கைவிட்ட உச்சநீதிமன்றம்

இந்தாண்டுக்கான நீட் தேர்வு தேதியை மாற்றியமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

நீட் தேர்வு தேதியை மாற்றக்கோரிய வழக்கு:  கைவிட்ட உச்சநீதிமன்றம்

இந்தாண்டுக்கான நீட் தேர்வு தேதியை மாற்றியமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கொரோனா பேரிடருக்கு மத்தியிலும், இந்தாண்டுக்கான தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து சுமந்த் நூகலா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நீட் தேர்வு விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 மீறப்பட்டதாகவும், பிற போட்டித் தேர்வுகளைப் போல நீட் தேர்வையும் பொருத்தமான வேறொரு தேதிக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீட் தேர்வை மறுசீரமைக்கவோ, ஒத்திவைக்கவோ முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.