எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர்களை முடக்கி அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறையினர்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடக்கியுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர்களை முடக்கி அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத்துறையினர்
அதிமுக ஆட்சியில் முறைகேடான முறையில் மாநகராட்சி ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு எஸ்.பி.வேலுமணி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 13 லட்சம் ரொக்கப் பணம், ரூ.2 கோடி மதிப்பிலான ஆவணங்கள், கணினிகள், ஹாா்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா். 
 
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக எஸ்.பி. வேலுமணியில் வங்கி கணக்குகள் மற்றும் லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் முடக்கியுள்ளனர்.மேலும், பறிமுதல் செய்த சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.