களை கட்டிய ஆயுத பூஜை விற்பனை.... சென்னை கோயம்பேட்டில் குவிந்த மக்கள்..!

களை கட்டிய ஆயுத பூஜை விற்பனை.... சென்னை கோயம்பேட்டில் குவிந்த மக்கள்..!
Published on
Updated on
1 min read

களை கட்டிய ஆயுத பூஜை விற்பனை.... சென்னை கோயம்பேட்டில் குவிந்த மக்கள்..!

படையெடுக்கும் மக்கள்

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில், பூஜைக்கானப் பொருட்களை வாங்கப் பொதுமக்களும் வியாபாரிகளும் கோயம்பேடு மார்கெட்டிற்குப் படையெடுத்து வருகின்றனர். அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் மார்கெட்டில் கூட்டம் அதிகமாக உள்ளது.

ஆயுதபூஜை கொண்டாட்டம்

தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதால் அந்நிறுவன பிரதிநிதிகள் மார்க்கெட்டுக்கு சென்று மொத்தமாக பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கடைகள்

வழக்கமான கடைகளைத் தவிர்த்து ஆயுத பூஜைக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கடைகளில் பூசணிக்காய், பொரி, கடலை, வாழைப்பழம், பழவகைகள், வாழைக்கன்று, வாழை இலை, கரும்பு, தேங்காய் போன்ற பூஜை பொருட்களும் பல்வேறு மலர் வகைகள், மலர் மாலைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களும் மொத்தவிலையிலும், சில்லறை விலையிலும் விற்கப்படுகின்றன.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் வரத்து அதிகமானதால், குறைந்த விலையில் பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com