மணற்கொள்ளை அத்துமீறல் ..!சீமான் வலியுறுத்தல்.!

மணற்கொள்ளை அத்துமீறல் ..!சீமான் வலியுறுத்தல்.!
Published on
Updated on
1 min read

அரசு நிலங்களில்  நடைபெறும் மணற்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வலியுறுத்தனர்.

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி, துறையூர், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்களில் முறைகேடாக நடைபெறும் மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமல், ஆளும் காட்சியான திமுக அரசு கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதாகவும் இதுகுறித்து புகார் அளித்த நாம் தமிழர் கட்சி சேர்ந்த நமது  உறுப்பினர்களான நமது தம்பிகளை மிரட்டுவதும், அச்சுறுத்துவம் காவல் துறையினரின் செயல்பாடாக இருக்கிறது எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கணைப்பாளர் சீமான்  தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை - பெங்களூரு , இடையேயான அதிவிரைவு சாலை அமைப்பதற்காகவும்  இந்திய ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை திட்டத்திற்காகவும், டி.பி.ஜெயின் போன்ற தனியார் பெருநிறுவனத்திற்காவும் தமிழ்நாடு அரசிற்கும் , ஆதித்தமிழ்க் குடிகளுக்கும் சொந்தமான பஞ்சமி நிலங்களிலிருந்து எந்தவித  அனுமதியும் இன்றி முறைகேடாக அதிகளவில் மணலை வெட்டி எடுக்கப்பட்டதால் இப்போது அந்த இடங்களெல்லாம்  சுரங்கங்களைப் போலக் காட்சியளிப்பதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய நாம் தமிழர் சீமான்,  இது குறித்துப் பொதுப்பணிமும் மற்றும் வருவாய்த்துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகாரளித்தும் இப்போது வரை எந்தவித   நடவடிக்கையும் எடுக்கவில்லை என்வும் ,.பி.ஜெயின் போன்ற தனியார் பெருநிறுவனங்கள் புரியும் மணற் கொள்ளைக்குத் துணைபோவதற்குப் பெயர்தான் 'திமுக அரசின் திராவிட மாடலா?' என்ற கேள்வியும் எழுப்பினார்.

தமிழ்நாடு அரசு இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி, துறையூர், பனப்பாக்கம் பகுதிகளில் மணற்கொள்ளையில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்வதோடு, மணற்கொள்ளையை முழுவதுமாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகக் வலியுறுத்தினார்.
 
மேலும் மண்ணையும், மண்ணின் வளங்களையும் காப்பதற்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினரை காவல்துறை மூலம் அச்சுறுத்துவதை  திமுக அரசு கைவிட வேண்டுமெனத்  தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com