திமுக ஆட்சியை அகற்ற...ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கும் சசிகலா!

திமுக ஆட்சியை அகற்ற...ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கும் சசிகலா!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அவரது சிலை  மற்றும் திருவுருவப் படங்களுக்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், சசிகலா மரியாதை:

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் அவர்களது ஆதரவாளர்களோடு தனித்தனியே சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர்களுடன் அவர்களது  ஆதரவாளர்களும் இணைந்து 2 நிமிட மெளன அஞ்சலியும், உறுதி மொழியும் ஏற்றனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, பல பிரிவுகளாக பிரிந்துள்ள அதிமுக அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், அனைவரும் ஒருங்கிணைந்து ஒன்றாக செயல்பட்டு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு சசிகலா அழைப்பு விடுத்தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், கரும்பு விவசாயிகளை பாதிக்க கூடிய வகையில், அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு இருப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய ஆவின் நிர்வாகம் பால் அட்டைகளை முறையாக வழங்காமல், ஸ்வீட் ஸ்டால் திறந்து வருவதாக விமர்சனம் செய்தார்.