தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்கும் சசிகலா - அதிருப்தியில் உள்ள அதிமுகவினரை சந்திக்க திட்டம்

ஒருவார சுற்றுப்பயணமாக தொன்மாவட்டங்களுக்கு செல்லவிருக்கும் சசிகலா, தன் ஆதரவாளர்களையும், அதிருப்தியில் உள்ள அதிமுகவினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களுக்கு  விசிட் அடிக்கும் சசிகலா - அதிருப்தியில் உள்ள அதிமுகவினரை சந்திக்க திட்டம்
Published on
Updated on
1 min read

ஒருவார சுற்றுப்பயணமாக தொன்மாவட்டங்களுக்கு செல்லவிருக்கும் சசிகலா, தன் ஆதரவாளர்களையும், அதிருப்தியில் உள்ள அதிமுகவினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு எதிராக வந்ததை தொடர்ந்து மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றதோடு மட்டுமில்லாமல், பொன்விழா நிகழ்ச்சியில் அதிமுக இணைப்பு குறித்த கருத்து கூறியிருந்தார்.

இதனிடையே, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள சசிகலா,  ஒருவார காலத்திற்கு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களிடமும், ஆதரவாளர்களிடமும் கலந்துரையாடி  கருத்துகளை கேட்க சசிகலா  திட்டமிட்டுள்ளார் .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com