அண்ணாமலை நடவடிக்கை எடுக்காத மாதிரி சொல்வது - அன்பில் மகேஸ்

எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மாதிரி அண்ணாமலை போன்றவர்கள் பேசி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
அண்ணாமலை நடவடிக்கை எடுக்காத மாதிரி சொல்வது - அன்பில் மகேஸ்
Published on
Updated on
1 min read

தஞ்சையில் 1896ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட  கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு வேறு இடத்திற்கு சென்ற பிறகு, தற்போது அருங்காட்சியமாக  மாற்றி அமைக்கப்பட்டடுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பத்து கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட  கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியால் இன்று திறந்துவைத்தார்.


அருங்காட்சியகத்தில்  மிகப்பெரிய பஞ்சவர்ண கிளிகள்,   சிங்கப்பூர் உள்ளிட்ட  20 நாடுகளைச் சேர்ந்த பறவைகளைக் கொண்ட  சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் சரணாலயத்திற்குள் சென்று மிக அருகாமையில் பார்க்கக்கூடிய அளவில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.  அமைச்சர் உள்ளிட்டோர் பஞ்சவர்ணகிளிகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் பழங்கால  ஏர்கலப்பை, நெல் அளக்கும் படிகள் உள்ளிட்ட  பழங்கால மக்கள் பயன்படுத்திய  அரிய வகை பொருட்கள்,   தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்  மற்றும்  தலைக் காவிரியில் இருந்து புறப்படும் காவிரி நீர் மேட்டூர் அணை, கல்லணை என தஞ்சை டெல்டா மாவட்டங்களை வளப்படுத்தும் காவிரி நீர் அழகாக பாய்ந்து வரும் தத்ரூபமான காட்சிகள் என குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட  அனைத்து தரப்பு மக்களும் பார்க்க கூடிய அருங்காட்சியகம் டெல்டா மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக இன்று திறக்கப்படுகிறது என்று பெருமிதம் கூறிய அமைச்சர்
அனைவரும் பார்க்ககூடிய அருங்காட்சியகத்தை உருவாக்கிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரையும் பாராட்டினார்.

மேலும் வெளிநாடுகளை போல் பொதுமக்கள் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றார். ஈஷா மையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான கேள்விக்கு, நேற்றைக்கு  முதல்வர்  சட்டமன்றத்தில்  அதற்கான உரிய பதிலை அளித்துள்ளார்கள் . அண்ணாமலை போன்றவர்கள்,  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத மாதிரி பேசி வருகிறார்கள். சட்ட ஒழுங்கு வரும் போது எந்தக் கட்சியை பாகுபாடு இல்லாமல் உடனடியாக தவறும் செய்யும் 
யாராக இருந்தாலும் அவர்கள் மீது   இதுவரை நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.    சட்ட ஒழுங்கை மீறுபவர்கள் மீது யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ்  பொய்யாமொழி தெரிவித்தார்
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com