நடிகர் நடிகைகளுக்காக வெயிலில் காக்க வைக்கப்பட்ட குழந்தைகள்...சிவகங்கையில் பரபர..!

நடிகர் நடிகைகளுக்காக வெயிலில் காக்க வைக்கப்பட்ட குழந்தைகள்...சிவகங்கையில் பரபர..!

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பள்ளிக் குழந்தைகளை நடிகர் நடிகைகளுக்காக வெயிலில் காக்க வைக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விடுமுறையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட பள்ளிக் குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது, நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் வருகை புரிந்ததால், அவர்களை மட்டும் உள்ளே அனுமதித்து நுழைவு வாயிலை மூடினர்.

இதையும் படிக்க : மாநில அரசு சுங்க கட்டணத்தை நீக்குமா? - அமைச்சரின் பதில் என்ன?

பின்னர் அவர்கள் வெளியில் செல்லும் வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பள்ளிக் குழந்தைகளையும் பார்வையாளர்களையும் அருங்காட்சியக நிர்வாகத்தினர் வெயிலில் காக்க வைத்திருந்தனர். இந்த நிகழ்வு பார்வையாளர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.