6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு...

6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு...

புத்தாண்டு பிறந்து பள்ளிகளின் முதல் நாள் இன்று துவங்குகிறது. 2020 கொரோனா தொடங்கி இரண்டு ஆண்டுகள் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணையம் மூலம் தங்களது படிப்பை தொடர்ந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பள்ளிகள் அனைத்தும் கட்டுபாடுகள் இன்றி திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு கடந்த 15 ஆம் தொடங்கி, 23 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து அனைவருக்கும் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 

மேலும் படிக்க | இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு