அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்... பள்ளி மாணவர்களுக்கு பஸ்ஸில் இடம் கிடைக்காததால் அவதி...

அரசு பேருந்தில் பள்ளி மாணவர்களுக்கு இடம் இல்லாததால் பள்ளிக்கு வர தடையாக உள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்... பள்ளி மாணவர்களுக்கு பஸ்ஸில் இடம் கிடைக்காததால் அவதி...

தமிழக அரசு தேர்தலின்போது பெண்களுக்கு இலவச பேருந்து என வாக்குறுதி அளித்தது தற்பொழுது தமிழகம் முழுவதும் பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கும் வருகின்றன. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ரேண்டாடி கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் நாள்தோறும் அரசு பேருந்தில் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சோளிங்கரில் இருந்து ரெண்டாடி  லாலாபேட்டை சிப்காட் வழியாக ஆற்காடு செல்லும் வழித்தடத்தில் 2 தனியார் பேருந்துகள்  மற்றும் 2 அரசு பேருந்துகள்  என நான்கு பேருந்துகள் இந்த சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. போது அரசு அறிவித்த இலவச பேருந்து காரணமாக தனியார் பேருந்துகளுக்கு போதுமான வருமானம் இல்லாததால் இரண்டு தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அனைத்து பயணிகளும் அரசுப்பேருந்தில் பயணிப்பதனாலும் பெண்கள் எல்லோரும் அரசுப்பேருந்தில் பயணிப்பதனாலும் நாள்தோறும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும் இடம் போடாததால் மாணவர்கள் பயணிக்க முடியாத நிலையில் பள்ளிக்கு வர முடியாமல் நின்றுவிடுகின்றன

நாள்தோறும் இந்த பேருந்தில் பயணிக்க முடியாத குழந்தைகள் இருபது முப்பது போன்ற குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாமல் நின்று விடுகின்றன இதனால் மாணவர்கள் கல்வியை பாதிக்கின்றது இந்த மாணவர்களுக்கு என்றே தனியாக அரசு பேருந்து இயக்கினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.