கழிவறையை சுத்தம் செய்யும் பள்ளி மாணவி.. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பள்ளி மாணவி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கழிவறையை சுத்தம் செய்யும் பள்ளி மாணவி.. சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ!!

உத்திரமேரூர் அருகேயுள்ள ஆனம்பாக்கம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோ அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை கழுவ வைக்கப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பவதியை கேட்ட போது, மாணவி கழிவறையை சுத்தம் செய்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.