தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே பாடப்புத்தகங்கள் விநியோகிக்க ஏற்பாடு!!

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், முதல் நாளே பாடப்புத்தகங்கள், சீருடைகளை விநியோகிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு.. முதல் நாளே பாடப்புத்தகங்கள் விநியோகிக்க ஏற்பாடு!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு, ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.  இதையடுத்து மாணவர்களை வரவேற்றிடும் வகையில் அனைத்து தயார்நிலை ஏற்பாடுகளையும் தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

இந்தநிலையில் முதல் நாள் வகுப்பு நாளை தொடங்கியதும்,  விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நோட்டுகள் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு விநியோகிக்க  அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுதவிர பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான  விளக்க கையேடும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்தல், பள்ளி கட்டடங்கள் மற்றும் வகுப்பறை சுவர்களுக்கு வண்ணம் பூசுதல்,  குடிநீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்தல், கழிவறை மற்றும் பள்ளி கதவுகளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்,வகுப்பறைக்குள் கிருமிநாசினி தெளித்தல்,வகுப்பறைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் உலவும் இடங்களில் மின்கசிவு மென்பொருட்களை பராமரித்தல் உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை  தூய்மை பணியாளர்களை கொண்டு பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.