உணவுபாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு... காலாவதியான பண்டங்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல்...

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவுபாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு... காலாவதியான பண்டங்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல்...

தேனி பழைய, புதிய பேருந்துநிலையம், போடி தினசரி மார்க்கெட்,பேருந்து நிறுத்தம், காமராஜ் பஜார், மேலசொக்கநாதபுரம் பகுதிகளில் உள்ள  இறைச்சி கடைகள், உணவகங்கள் பழக்கடைகள், குளிர்பானங்கள் உள்ளிட்ட கடைகளில்  உணவு பாதுகாப்புதுறையினர் திடீர் ஆய்வு செய்தனர்.

இதில் கெட்டுப்போன மீன்கள். காலாவதியான குளிர்பானங்கள் மெழுகு தடவிய ஆப்பிள்கள், கலப்பட டீத்தூள், சுகாதார மற்ற முறையில் வைத்து விற்பனை செய்த உணவுப்பன்டங்கள் உணவுக்கு வண்ணம் சேர்க்கும் ரசாயன வண்ணப்பொடிகள், பேக்கிங் இல்லாமல் விற்பனை செய்யும் சமையல் எண்ணெய்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அபதாரம் விதித்தனர். மேலும் இதுபோன்ற பொருட்களை இனிமேல் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தனர்.

மேலும் இந்த ஆய்வில் குழந்தைகளுக்கு விற்கப்படும் செண்ட் வடிவிலான மிட்டாய்களை கண்டு உணவுபாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்து கடைக்காரர்களுக்கு எச்சரித்தனர். இந்த ஆய்வில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.