ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகளை ஆளுநராக நியமிப்பதை முதலில் நிறுத்த வேண்டும் - சீமான் காட்டம்!

ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகளை ஆளுநராக நியமிப்பதை முதலில் நிறுத்த வேண்டும் - சீமான் காட்டம்!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய சீமான் ஒரே நாடு ஒரே மொழி குறித்து பேசினார்.

”ஒரே நாடு ஒரே மொழி” சரியல்ல:

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜையை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஒரே நாடு ஒரே மொழி” என்பதை வலுக்கட்டாயமாக திணிப்பது சரியல்ல என்றும், பல மொழிகள் பேசக்கூடிய நாட்டில் இது பேராபத்தை விளைவிக்கும் என்று கூறினார்.

ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகளையெல்லாம் ஆளுநராக நியமிப்பதை நிறுத்த வேண்டும்:

தொடர்ந்து, ஆளுநர் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 
ஐபிஎஸ், ஐஏஎஸ், நீதிபதிகள் இவர்களையெல்லாம் ஆளுநராக நியமிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களை நீங்கள் ஆளுநராக நியமித்தால் அவர்களிடம் என்ன நீதி இருக்கும்?மக்களுக்கு நியாயம், நேர்மை, உண்மை தன்மை எங்கே இருக்கும்?அதனால், இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளின் கருத்தை நான் ஏற்கிறேன் என்று கூறினார்.

இதையும் படிக்க: ஆளுநர் உளறி கொட்டுகிறார்...கோவை வழக்கை என்.ஐ.ஏவிடம் ஏன் தூக்கி கொடுத்தீர்கள்? சீமான் கேள்வி!

ஊழல் லஞ்சம் பெறுபவர்களிடம் லட்சுமி, விநாயகர் துணை போவார்களா?:

இதைத்தொடர்ந்து, நாணய நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் புகைப்படம் அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், ஊழல், லஞ்சம் பெறுபவர்களிடம் லட்சுமி, விநாயகர் துணை போவார்களா? சாராயக்கடைகளில் சென்று சாராயம் வாங்குபவர்களிடமும், கொலை, கொள்ளை செய்பவர்களிடமும் காந்தி சிரித்துக் கொண்டே இருக்கும் நோட்டு செல்வது சரியா? என்றும் கேள்வி எழுப்பி சீமான் பேசினார்.