"சீமான் கடும் சொற்களை தவிா்க்க வேண்டும்" - கே.எஸ். அழகிரி கண்டனம்.

"சீமான் கடும் சொற்களை தவிா்க்க வேண்டும்" -  கே.எஸ். அழகிரி கண்டனம்.

சீமான் கடும் சொற்களை தவிா்க்கவில்லை என்றால் மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படுவாா் என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி தொிவித்துள்ளாா்.

சென்னை  விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை ஜனநாயக ரீதியான அரசியல் அமைப்பு. காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இவர் தான் பிரதமர் வேட்பாளர் என சொல்லி தேர்தலை சந்தித்தது கிடையாது. ஆனால் இயல்பாகவே பிரதமர் வேட்பாளர் இருப்பார்கள். ராகுல்காந்தி தான் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் பிரதமர் வேட்பாளர். பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தொண்டர்கள் சொல்வார்கள். ஆனால் கட்சி அப்படி சொல்லாது. இது தான் நேரு காலத்தில் இருந்து வரும் நிலைமை. 

இந்தியா என்று என்ன நினைத்து பெயர் வைக்கப்பட்டதோ அது நடந்து உள்ளது. நாங்கள் இந்தியர்கள். எனவே இந்தியா என பெயர் வைத்து உள்ளோம். இந்தியா என பெயர் வைத்தற்கு பெருமை. இதற்கு மோடி ஏன் அச்சப்பட வேண்டும். ராகுலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள். ஆனால் இறுதியில் நீதிமன்றம் எங்கள் பக்கம் தான் தீர்ப்பு தந்து உள்ளது.  இந்தியா என்பது இந்தியாவை பிரதிபலிக்கும் பெயரை வைத்து உள்ளோம். அதில் தவறில்லை. அச்சப்பட வேண்டிய காலமிது. 

குஜராத் மண்ணில் நீதி கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைத்து உள்ளது. உச்சநீதிமன்ற சரியான விளக்கம் தந்து உள்ளதால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. 

சீமான் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள். வேகமாக பேசி ஏதாவது அடையலாமா என நினைக்க கூடியவர்கள். சிறுபான்மை, பெரும்பான்மை என்பது உலகம் முழுவதும் இருக்க கூடியது. தமிழகத்தில் நாம் பெரும்பான்மை. கேரளா சென்றால் சிறுபான்மை. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை. ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் சிறுபான்மை. சீமான் போன்றவர்களுக்கு புரியாது. தடித்த வார்த்தைகளை தவிர்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வெறுக்கப்படுவார். 

இலங்கையில் யுத்தம் ஏற்பட்டது. மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டது. எங்கேயும் பெண்களுக்கு அனீதி இழைக்கப்பட்டால் காங்கிரஸ் அதை அனுமதித்த கூடாது. இலங்கையில் மக்கள் அவதிப்பட்ட ராஜீவ் காந்தி விமானத்தில் பொருட்களை அனுப்பி யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு உணவு பொருட்களை தந்தார். தமிழகத்தில் பேசி கொண்டு இருப்பவர்கள் செய்தார்களா. மக்கள் துன்பற்றால் காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது. 

அண்ணாமலை செல்வது பாதயாத்திரை என சொல்ல கூடாது. ராகுல்காந்தி 4800 கிலோ மீட்டர் நடந்தார். தமிழகத்தில் வைகோ, குமரி ஆனந்தன் நடந்து சென்றார்கள். ஆனால் அண்ணாமலை சொகுசு வாகனத்தில் செல்கிறார். ஒரு ஊர் வந்ததும் இறங்கி விடுவார். இதற்கு பெயர் நடைபயணமா? பரப்புரை என சொல்லி இருக்க வேண்டும். நடப்பதற்கு கூட அச்சப்படுபவர்கள் நாட்டில் என்ன செய்து விட போகிறார்கள். இது ஒரு கேலிக்குத்து.

அண்ணாமலை நடைபயணத்தால் பா.ஜ.க. கட்சியிலேயே எதுவும் ஏற்படாது. தமிழகத்தில் எந்த வித மாற்றமும் வந்து விடாது. தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள். கட்சியில் மாற்றம் என்பது எப்போதும் இருக்க கூடியது. 3 ஆண்டுகள் முடிந்தாலே மாற்றி விடுவார்கள். தமிழக காங்கிரஸ் தலைவராக 5 ஆண்டுகளாக இருக்கிறேன். 

பா.ஜ.க. எதிராக எதிர்கட்சிகள் வலிமையாக இருப்பதால் மோடி அச்சப்படுகின்றார். அடுத்து மும்பையில் கூட்டம் நடக்கும் இன்னும் பலம் கூடும். தமிழகத்தை பற்றி அமீத்ஷாவிற்கு தெரியாது. அண்ணாமலைக்கு தமிழகத்தில் யாரும் பயப்பட மாட்டார்கள். அச்சப்பட மாட்டார்கள். அம்லாக்கத் துறை என்ன செய்து விட முடியும். 

தைரியம் இருந்தால் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டும் அதன் பின்னர் பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்க   | அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்...!