பிளவே இருந்தாலும் சட்டசபையில் பிரச்னை இல்லாமல் இருக்கைகள் ஒதுக்கப்படும்...!

பிளவே இருந்தாலும் சட்டசபையில் பிரச்னை இல்லாமல் இருக்கைகள் ஒதுக்கப்படும்...!

அதிமுகவில் பிளவு ஏற்பட்டாலும் சட்டப்பேரவையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல்  இருக்கைகள் அமைக்கப்படும் பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

கிராம சபை கூட்டம்:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை மாவட்டம் நொச்சி குளத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் தங்கபாண்டியன், கிராம ஊராட்சி தலைவர் வேலம்மாள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கிராம வளர்ச்சி குறித்து அரசு உயர் அதிகாரிகள் பொதுமக்களிடம் எடுத்துரைத்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். 

திமுக அரசின் நல்லாட்சியை கொச்சை படுத்துகின்றனர்:

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, திமுக அரசின் நல்ல திட்டங்களை  பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர்களின் சாதாரணமான பேச்சுகள் கூட பெரிதாக்கப்படுவதாக கூறினார். மேலும், திமுக அரசின் நல்லாட்சியை கொச்சை படுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: அமைச்சர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம்...ஓசியை அனுபவிப்பவர்கள் ஓசியை பற்றி பேசுகிறார்கள்...!

திருப்தியாக இருக்கைகள் ஒதுக்கப்படும்:

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் பிளவு ஏற்பட்டாலும் சட்டப்பேரவையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் அதிமுக உறுப்பினர்களுக்கு திருப்தியாக இருக்கைகள் அமைக்கப்படும் என அப்பாவு தெரிவித்தார்