தமிழ்நாடு
பச்சை நிறத்தில் காட்சி அளித்த கடல் நீர்... பாம்பனில் மீனவர்கள் அச்சம்...
பாம்பன் கடல் பகுதியில் கடல் நீர் பச்சை நிறத்திற்கு மாறியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பாக் ஜலசந்தி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடலில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், கீழக்கரை கடற்கரைப் பகுதியில் கடல் நிறம் நீல நிறத்திற்கு மாறியது. இதனை பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர். இந்நிலையில், பாம்பன் கடற்பகுதிகளில் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கூறுகையில், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது என்றும், கடல் நுண்ணுயிர் பாசிகள் காரணமாக கடல்நீர் பச்சை நிறமாக மாறியிருப்பதாக கூறினார். இதனால் மீனவர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், இது தானாகவே சரியாகிவிடும் என்றும் கூறினார்.