வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வந்தேறிகள் என வம்பு இழுத்த சீமான் - கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வந்தேறிகள் என வம்பு இழுத்த சீமான் - கைது செய்யக்கோரி  ஆர்ப்பாட்டம்

 ஈரோட்டில் இழிவாக பேசிய சீமான் 

 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக  போட்டியிடும் மேனகாநவநீதனை ஆதரித்து கடந்த 13ம் தேதி அன்று பிரச்சாரம் மேற்க்கொண்டார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். 

பிரச்சாரத்தின்போது அருந்ததிய மக்களை வந்தேறிகள் என விமர்சித்தார் இதனை கண்டித்து அருந்ததியர் என கூட்டமைப்பு சார்பில் பல்வேறு எதிர்ப்புகள் தொடங்கியுள்ள நிலையில் இன்று ஈரோடு நாடார் மேடு பகுதியில் அருந்ததியர் சுயமரியாதை கூட்டமைப்பு சார்பில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கியது நாம் தமிழர்  கட்சி..

சீமானை கைது செய்ய கோரி கண்டனங்கள் 

ஆர்ப்பாட்டத்தின்போது சீமானின் புகைப்படத்தை தீயிட்டு எரிக்க முயன்ற போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர் இதனை தொடர்ந்து சீமானை கைது செய்ய வலியுறுத்த கோரி கண்டனகோசங்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க | ஈரோட்டில் திமுக அத்துமீறுகிறது- ஓபிஎஸ் திமுகவின் பக்கம் - புகார் கொடுக்க வந்த இடத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகி தெரிவிக்கையில் 

அருந்த்திய மக்களை வந்தேரிகள் என இழிவாக பேசிய சீமானை கைது செய்ய வேண்டும் ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு  பிரச்சாரத்திற்கு வரும் சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் இல்லையெனில் சீமானுக்கு கருப்பு கொடி காட்டுவோம் என தெரிவித்தனர்