காமராஜர் நினைவு நாள்... மலர் தூவி சீமான் மரியாதை!!

தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்தவர் கர்ம வீரர் காமராஜர் என  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

காமராஜரின் 49-வது நினைவு நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த உலகத்தில் எப்படிபட்ட மாற்றத்தை கொண்டு வர நினைக்கிறாயோ அதை உன்னில் இருந்து கொண்டு வா, உழைக்காமல் உண்பது திருட்டு என்று சொல்லி, அகிம்சையை பின்பற்றியவர் மகாத்மா காந்தி. காந்தி பிறந்த நாளில் உயிரை விட்டு அவர் மீதுள்ள அன்பை பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், " கருணாநிதி ஆட்சியில் மது கடையை தொடங்கி, தினம் தோறும் இப்போது வரை கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது. அதிலும் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் இதையே தொழிலாக செய்து வருகின்றனர். பள்ளி கல்லூரிகளில் அருகில் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ளது. இன்று தலைவர்கள் இசட் ஒய் பிரிவு பாதுகாப்பு வைத்துள்ள நிலையில் அன்றைய தினம் அவர் எவ்வளவு எளிமையாக இருந்தார் என்பது நினைவுக்கு வருகிறது" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் , "அதற்குப் பிறகு வந்தவர்கள் நேர்மையான ஆட்சியை கொண்டுவராமல் சகிக்க முடியாத ஊழல் லஞ்சத்தை கொண்டு வந்துள்ளனர். புனித தலைவனை நினைவு நாளில் அவரை போற்றும் வகையில் இந்த தலைமுறை தமிழ் பிள்ளைகள் நல்ல முன்னெடுப்பு எடுப்போம்" என கூறியுள்ளார்.

மேலும், "1971 லேயே இதற்கு தீர்வு வந்திருக்கும் அதை கெடுத்ததே கருணாநிதி என்று சொல்கிறார் பக்தவத்சலம்" எனச் சாடியுள்ளார்.