"பிறந்த தேதியை விட்டு, பெயர் வைத்த தேதியை கொண்டாடுவது இவர்கள் ஆட்சி" சீமான் ஆவேசம்!

"பிறந்த தேதியை விட்டு, பெயர் வைத்த தேதியை கொண்டாடுவது இவர்கள் ஆட்சி" சீமான் ஆவேசம்!

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "கோட்டையில் ஒருநாள் தேசிய கொடியை ஏற்றுவென். இந்த காலத்தை நான் உருவாக்குவேன். அண்ணா பெயர் வைத்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவார்களாம். ஸ்டாலின், உதயநிதி எல்லாம் அவர்கள் பிறந்த தேதியை கொண்டாடாமல் பெயர் வைத்த தேதியை தான் கொண்டாடுவார்கள் அதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சி" என விமர்சித்துள்ளார்.

"சாலை, மருத்துவமனை, நூலகம் அனைத்திற்கும் கருணாநிதி பெயரை சூட்டுகின்றனர்" என குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும், "கொசுவை ஒழிக்க முடியவில்லை, ஊழலை ஒழிக்க போகிறார்களா ?, ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற அளவிற்கு வேலை கொடு" என சீமான் பேசியுள்ளார். 

மேலும், "திராவிடம் என்பது தமிழகம் அல்லாதோர் வசதியாக வாழ்வதற்கும் ஆள்வதற்கும் கொண்டுவரப்பட்ட ஒன்று. கடற்கரை எவருடைய கல்லறையாகவும் இருக்க முடியாது. கடற்கரையாக தான் இருக்க வேண்டும். திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம். அதிமுக என்றால் அனைத்திந்திய திருடர்கள் முன்னேற்ற கழகம்"எனச் சாடியுள்ளார்.

மேலும், "ஜெயலலிதா அவர்கள் தனியாக நின்று வென்றார்கள் என்றால் என்னால் தனித்து நின்று வெல்ல முடியாதா, நான் தற்காலிக தோல்விக்காக, நிரந்தர வெற்றியை இழக்க போவதில்லை. அரசியல் குறியீடாக, அடையாளமாக முத்துராமலிங்க தேவரை இந்த திராவிட காட்சிகள் மாற்றிவிட்டது. அவருக்கு மாலை அணிவித்துவிட்டால் தேவர் வாக்குகள் எல்லாம் வந்து விடும் என்று நினைக்கிறார்கள்" எனது தெரிவித்துள்ளார்.