உரிமம் இல்லாமல் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்....

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உரிமம் இல்லாமல் வீட்டில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

உரிமம் இல்லாமல் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்....

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் அவர்கள் உரிமம் இல்லாமல் பட்டாசு கடை நடத்துபவர்களின் கடைகளை சீல் வைக்கவும் பட்டாசுகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

அதன்பேரில் இன்று அதிகாலையில் இருந்து திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி  தலைமையில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தனக்கோடி மகன் கந்தசாமி என்பவர் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வியாபாரம் செய்ய தனது வீட்டில் முறையான உரிமம் இல்லாமல் சுமார் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள   பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் அனைத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் முறையான உரிமம் இல்லாமல் பட்டாசு பதுக்கி வைத்திருந்தமைக்காக, கந்தசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.