பாஜகவில் இருந்து விலகினார் மூத்த தலைவர் இல.கணேசன்...

பாஜகவில் இருந்து விலகினார் மூத்த தலைவர் இல.கணேசன்...

பாஜக மூத்த தலைவராக இருந்த இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார்.அடுத்த சில நாட்களில் மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவியேற்க இருக்கிறார்.ஆளுநர் பதவி அரசியல் சாசனப் பதவி என்பதால் அப்பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட எந்தப் பொறுப்பிலும் இருக்க முடியாது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் நேற்று மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையை சந்தித்த இல.கணேசன், பாஜகதேசிய செயற்குழு உறுப்பினர்,அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அளித்தார்.கடந்த 30 ஆண்டுகளாக அவர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தற்போது அப்பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.