செந்தில் பாலாஜி கைது; "பழிவாங்கும் நோக்கம் இல்லை" அண்ணாமலை விளக்கம்! 

செந்தில் பாலாஜி கைது; "பழிவாங்கும் நோக்கம் இல்லை" அண்ணாமலை விளக்கம்! 

Published on

பழிவாங்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். 

அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், இது மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 
இந்த நிலையில் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வின் கருவூலமாக இருக்கிறார் என்றும், அதனால் தான் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் நேரில் சந்தித்து வருவதாக சாடினார். 

செந்தில் பாலாஜி மீதான வழக்கு  விசாரணைகள் குறித்து பட்டியலிட்ட அண்ணாமலை, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக குறிப்பிட்டார். இதில் எங்கே பழிவாங்கும் நடவடிக்கை வருகிறது என வினவிய அண்ணாமலை, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை என்றும் யாரையும் பழிவாங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com