செந்தில் பாலாஜி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

செந்தில் பாலாஜி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க : "திராவிட மாடலடா, திருப்பி அடிப்போமடா, ஷ்ஷ்ஷ்ஷு", கட்சி கூட்டத்தின் மேடையில் சாமியாடி குறி சொன்ன பெண்!!

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி வி கார்த்திகேயன், வழக்கை விசாரித்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டப்படி சரியானது என்று தீர்ப்பளித்தார்.  

இந்த தீர்ப்பை எதிர்த்து அவரது மனைவி மேகலா, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.