" திமுக கூடாரத்தையே செந்தில் பாலாஜி காலி செய்து விடுவார் " - சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் .

" அம்மாவுக்கு செய்த துரோகத்தால்....."

" திமுக கூடாரத்தையே செந்தில் பாலாஜி காலி செய்து விடுவார் " - சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் .

ஜெயலலிதாவுக்கு செய்த துரோகத்தால் தான்  செந்தில் பாலாஜி அனுபவித்து வருகிறார்; திமுக கூடாரத்தையே செந்தில் பாலாஜி காலி செய்து விடுவார் என சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் விமர்சித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பத்தூர், நெடுமரம், காரையூர், தெக்கூர், நெற்குப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இக்கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்டச் செயலாளரும், சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் கிளை நிர்வாகிகளோடு தரையில் அமர்ந்து கலந்துரையாடி பின்பு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார். 

முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை, இளைஞர்கள் இளம்பெண்கள் மற்றும் மகளிர் அணி, பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைகளை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் வழங்கி வருகின்றார். 

அதன் அடிப்படையில் தெக்கூர், நெற்குப்பை பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து தரையில் அமர்ந்து கிராமசபை கூட்டம் போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார். 

அப்போது நிர்வாகிகள் இடையே பேசுகையில் " அம்மாவுக்கு செய்த துரோகத்தால் செந்தில் பாலாஜி அனுபவித்து வருகிறார்; இன்னும் சில ஆண்டுகளில் திமுக கூடாரத்தையே செந்தில் பாலாஜி காலி செய்து விடுவார்; அதிமுக மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரனின் 40 ஆண்டுகால தொழிலை பாழாக்கியதன்  விளைவாக, அவர் வேண்டுதல்படி செந்தில் பாலாஜி தற்பொழுது கடவுளாலும் பழிவாங்கப்படுகிறார்",  என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க    |  திருப்பரங்குன்றம் திருவிழாவில் இந்திய வரைபடத்துடன் திரிந்த வங்கதேச இளைஞர்...! காரணம் என்ன...?