பட்டாசு ஆலைகளுக்கென தனி விதிகளை வகுக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

பட்டாசு ஆலைகளுக்கென தனி விதிகளை வகுக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

பட்டாசு ஆலைகளை கண்காணித்து, அவற்றை முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த பெண்கள் உள்ளிட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையும் படிக்க : கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானம்...!

இந்நிலையில், பட்டாசு ஆலைகளை முறைப்படுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டாசு ஆலைகளுக்கு பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.