முழு விவரம் தெரியாமல் சித்தராமையா கருத்து தெரிவிப்பதாக துரைமுருகன் சாடல்!

முழு விவரம் தெரியாமல் சித்தராமையா கருத்து தெரிவிப்பதாக துரைமுருகன் சாடல்!

மேகதாது அணை தொடர்பான பிரச்னையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விவரம் தெரியாமல் பேசி வருவதாக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக  அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாமல் தலையிடுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசியது குறித்து கேள்வி எழ்ப்பினர். அதற்கு பதலளித்த துரைமுருகன்,   மேகதாது விவகாரத்தில் முழு விவரம் தெரியாமல் சித்தராமையா கருத்துக்களை தெரிவித்துள்ளதாக சாடினார்.

இதையும் படிக்க : மணல் குவாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை...!

தொடர்ந்து, டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் விட முடியாது என கர்நாடக அரசு தெரிவித்ததாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கர்நாடக அரசு எப்போதும் அப்படி தான் சொல்லி வருவதாகவும், இன்றைக்கும் அப்படித்தான் சொல்லிவருவதாகவும் கூறினார். 

இதைத்தொடர்ந்து, மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு எனக்கு எதுவும் தெரியாது என துரைமுருகன் தவிர்த்து சென்றது குறிப்பிடத்தக்கது.