சார் பிஇடி பீரியட் - ல விளையாட விடுங்க அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை

உடற்கல்வி வகுப்பில் வேறு வகுப்புகள் எடுப்பதை தவிர்த்து விட்டு விளையாட மட்டும் விட வேண்டும் என கோரிக்கை” வைத்தார்.
சார் பிஇடி பீரியட் - ல விளையாட விடுங்க  அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை
Published on
Updated on
1 min read

பள்ளிகளில் பி இ டி பீரியட் 
  

பள்ளிகாலங்களில்  மாணவர்களுக்கு கால அட்டவணை கொடுத்து பாடங்கள் நடந்துவது அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் வழக்கம். அந்த வகுப்புகள் வாரத்தில் 2 அல்லது 3 பீரியட் இடம்பெறும். 

ஆசிரியர்கள் வகுப்பு 

இந்த பி இ டி பீரியட் ல ஏதேனும் ஒருசிலபாடங்கள் இன்னும் முடிக்கவே இல்ல. நீங்க விளையாட போகவேண்டாம் உட்காருங்க நான் வந்து பாடம் நடத்துறேன்னு சொல்லுற ஆசிரியர்களே அதிகம் .

 விளையாட்டு துறை அமைச்சருக்கு மாணவியின் வேண்டுகோள் 

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற நிலையில் இன்றைக்கு நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்திருந்தார். அப்போது மாணவி ஒருவர் ”உடற்கல்வி வகுப்பில் வேறு வகுப்புகள் எடுப்பதை தவிர்த்து விட்டு விளையாட மட்டும் விட வேண்டும் என கோரிக்கை” வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர் அனைத்து தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தான் என்னுடைய முதல் பணியாக இருக்கும் விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறுதிகள் கொடுத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com