சிவகாசி : தனியார் கல்லூரியில் நுண்கலைத்திறன் திருவிழா...! பாலின சமநிலை உணர்த்தும் விழிப்புணர்வு ஊர்வலம்..!

சிவகாசி தனியார் கல்லூரியில் நுண்கலைத்திறன் திருவிழா...! இளைஞர் நலத்துறை ஏற்பாடு..!

சிவகாசி : தனியார் கல்லூரியில் நுண்கலைத்திறன் திருவிழா...! பாலின சமநிலை உணர்த்தும் விழிப்புணர்வு ஊர்வலம்..!

சிவகாசி தனியார் பெண்கள் கல்லூரியின் இளைஞர் நலத்துறை சார்பாக, நுண் கலைத்திறன் திருவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் உள்ள அனைத்து பாடப்பிரிவு மாணவிகள், அரசியல் மற்றும் ஆன்மீகதலைவர்கள்,  ராணுவம், காவல்துறை போன்ற பல்வேறு துறையினரின் வேடமிட்டு பாலின சமநிலை என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். 

இந்த கொண்டாட்டத்தின் தொடக்கமாக, விழாவில் கல்லூரியின் முன்னாள் மாணவியும்,  சிவகாசி மாநகராட்சி மேயருமான சங்கீதா இன்பம், குத்து விளக்கு ஏற்றியும், பேரணியை கொடி  அசைத்தும் தொடங்கி வைத்தார்.  ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் பெண்களுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், சமமான இந்தியாவை அமைப்போம்; வேண்டும், வேண்டும் சமத்துவம் வேண்டும்; என்பது போன்ற பல்வேறு கோஷங்களை முழக்கங்களாக எழுப்பியபடி சென்றனர். அதனை தொடர்ந்து  மாணவிகள் பங்கேற்ற பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள், இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறையிலும் பெண்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், தொட்டிலை ஆட்டும் பெண்கள் இந்தியாவை மட்டும் அல்ல உலகையே ஆளும் திறன் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அனைவரும் பாலின சமத்துவத்தை கடைப்பிடித்து பெண்களை மதித்து, பெண் கல்விக்கு முக்கியத்துவம் தந்து, முழு ஒத்துழைப்பு கொடுத்தால் பாலின சமத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும் என கூறுகின்றனர்.