"மதுபான கடைகளைத் தவிர வேறு எங்கும் புகைபிடிக்கும் அறை திறக்க கூடாது" அரசாணை வெளியீடு!

"மதுபான கடைகளைத் தவிர வேறு எங்கும் புகைபிடிக்கும் அறை திறக்க கூடாது" அரசாணை வெளியீடு!

 உணவகங்களில் புகை பிடிக்கும் கூடம் அமைப்பதற்கு தடை விதித்து, அரசிதழ் வெளியிடப்படுள்ளது. 

பொதுவாக உணவகங்களில் புகை பிடிப்பதற்கு என்றே ஒரு தனி அரை ஒதுக்கப்பட்டிருக்கும். ஏன் என்றால், உணவு உன்ன வரும் வாடிக்கையாளர்களில் ஒரு சிலர், உணவு உண்ணும் பொழுதோ அல்லது உணவு உண்ணுவதற்கு முன்போ அல்லது உணவு உன்னத பின்னரோ, புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால், உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், Smoking room என்று ஒரு தனி அறையை ஒதுக்கியிருப்பார்கள்.

இவ்வாறு தனி அறையில் புகைப்பிடிப்பதால், மற்ற வாடிக்கையாளர்களுக்கு எவ்வித தொந்தரவுகளும் இல்லாமல் இருந்தாலும், இது புகை பிடிப்பதை ஊக்குவிப்பது போன்ற செயலாகும். எனவே, உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைபிடிக்கும் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில், அது தற்போது அரசிதழில் வெளியாகியுள்ளது.  

அதில் சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர வேறு எங்கும் புகைபிடிக்கும் கூடல்  திறக்கப்பட கூடாது என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறியிருந்தால் பொருட்களை பறிமுதல் செய்யப்படும் என்றும் 1-3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை மற்றும்30-50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க || திருச்சியில், ஆர்பிட்டல் அதெரெக்டாமி சிகிச்சை முறை அறிமுகம்!!