ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்.... அதிரடி சோதனை நடத்திய போலீசார்...!

ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்.... அதிரடி சோதனை நடத்திய போலீசார்...!

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசிகளை வெளி மாநிலங்களுக்கு கடத்தி அதிக அளவில் விற்பனை செய்து வருவதை தடுக்கும் வகையில் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலானய்வு போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45.675 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு இரண்டு சக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 12 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 22 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சிம்புவின் பாடலுக்கு வாய் அசைக்க போகும் நடிகர் விஜய்??