சமூக செயற்பாட்டாளர் லிங்கன் காலமானார்..!

சமூக செயற்பாட்டாளர் லிங்கன் காலமானார்..!

சமூக செயற்பாட்டாளர் லிங்கன் இன்று மாலை சென்னை  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கன்னியாகுமரியை பூர்வீகமாகக் கொண்ட இவர், இந்திய பொதுவுடமைக் கட்சியின் கலை இலக்கிய பெருமன்றத்தில்  பணியாற்றி வந்தார். பொதுவுடமை சிப்பி சிங்காரவேலரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை தனது வாழ்நாள் கடமையாக கொண்டிருந்தார். 

பொதுவாக சென்னையில் நடக்கும் அனைத்து போராட்டங்கள் ஜனநாயக கூட்டங்களில் கட்டாயம் இவர் கலந்து கொண்டிருப்பார். மீனவர்களின் பிரச்சனை பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை பற்றியும் பல்வேறு சிறு  நூல்களை இவர் எழுதியுள்ளார்.


 
மேலும், வழக்குரைஞராக இருந்த இவர், பொதுவாக நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்த்து போராட்டங்கள், மனித உரிமை செயல்பாடுகள், உண்மை கண்டறியும் குழுக்கள் என 25 ஆண்டு காலத்தை பொதுமக்களுக்காகவே  செலவிட்டார்.  திருமணம் செய்து கொள்ளாத இவருக்கு தற்போது வயது 56 ஆகும். 

இவரது உடல் நாளை மண்ணடியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.