ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் கலந்தாலோசித்தால் சுமூக முடிவு - வைகைச்செல்வன்!

ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் கலந்தாலோசித்தால் சுமூக முடிவு - வைகைச்செல்வன்!

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் கலந்து ஆலோசித்தால் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக இபிஎஸ்-ஓபிஎஸ் தனித்தனியே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெறும் அதிமுக தீர்மானக்குழுவின் இறுதிக் கூட்டத்தில் இருவரும் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாக வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து கட்சித் தலைமையே முடிவு செய்யும் எனவும், பொதுக்குழுவில் பேசப்பட உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவை குறித்த தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இன்று ஆலோசிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.