இந்தி தெரியாதவர்களுக்கு உணவு கிடையாது: சர்ச்சையில் சிக்கிய சொமாட்டோ நிறுவனத்தை வச்சி செய்யும் தமிழக இளைஞர்கள்...

இந்தி தெரியாதவர்களுக்கு உணவு கிடையாது எனக் கூறிய சொமாட்டோவுக்கு எதிராக ட்விட்டரில் தமிழக இளைஞர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது டிரெண்டிங்காகி வருகிறது. 
இந்தி தெரியாதவர்களுக்கு உணவு கிடையாது: சர்ச்சையில் சிக்கிய சொமாட்டோ நிறுவனத்தை வச்சி செய்யும் தமிழக இளைஞர்கள்...
Published on
Updated on
1 min read

தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு விநியோகம் செய்யப்பட்ட உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படவில்லை. இதுகுறித்து அவர் வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்து, தனக்கு பணத்தை திரும்ப வழங்கும்படி கூறியுள்ளார். 

சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை பிரிவில் இந்தியில் கேள்வி கேட்ட நிலையில், தனக்கு இந்தி தெரியாது என்று கூறியுள்ளார். இதற்கு அவர்கள் பணம் திரும்ப கிடைக்காது என்றும்,  இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இந்தியராக இருக்க முடியும் என கேட்டுள்ளனர். மேலும் இந்தியராக இருந்து, எப்படி இந்தியில் பேச முடியாமல் இருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதனை விகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சொமேட்டோ நிறுவனத்துடனான உரையாடல் ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டுள்ளார். இதனையொட்டி,  தருமபுரி எம்.பி செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், சொமேட்டோ நிறுவனத்திடம் இந்தி எப்போது இந்தியாவின் தேசிய மொழி ஆனது என்றும்,  தமிழகத்தில் உள்ளவர்கள் ஏன் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இதன் எதிரொலியாக தற்போது, Reject Zomato, Boycott Zomato ஆகிய ஹாஷ்டேக்குகள் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.  சொமேட்டோ நிறுவனம் சர்ச்சைகளில் சிக்குவது இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே வாடிக்கையாளரின் உணவை ஊழியர் ஒருவர் சாப்பிட்ட வீடியோ வைரலானது. இதேபோல், பெங்களூரில் பெண் வாடிக்கையாளர் ஒருவரை சொமேட்டோ ஊழியர் தாக்கியதாகப் புகார் எழுந்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com