கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 போட்டியின் முன்பதிவு துவக்கம்!

கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 போட்டியின் முன்பதிவு துவக்கம்!

சென்னை மாநில கல்லூரியில் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி நடக்கவிருக்கும் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023-போட்டியின் முன்பதிவு துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய வாட்ஸ் அப் யுகத்தில் வெறுப்பு அரசியலை சிலர் பரப்பி வருவதாகவும், மாணவர்கள் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளில் எது நல்ல செய்தி என்பதை தெரிந்து தங்களுடைய பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்  என தெரிவித்தார்.

இதையும் படிக்க : மாநில அரசு சுங்க கட்டணத்தை நீக்குமா? - அமைச்சரின் பதில் என்ன?

அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் திருநங்கைகளுக்கான பதிவு கட்டண செலவை தென்சென்னை திமுக ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்தார். மேலும் இவ்விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமான இளைஞர்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொண்டனர்.