100 ஆண்டுகளை எட்டிய தெற்கு ரயில்வே தலைமையகம்...! வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கட்டிடம்..!

100 ஆண்டுகளை எட்டிய தெற்கு ரயில்வே தலைமையகம்...! வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கட்டிடம்..!

சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே தலைமையகம் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தெற்கு ரயில்வே தலைமையகம் விளங்குகிறது. 

நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1922-ஆம் ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் மாகாண ஆளுநரின் மனைவி, லேடி வெலிங்டனால் திறக்கப்பட்டது. நூறாண்டுகள் நிறைவையொட்டி தேசியக் கொடி வண்ணத்தில் மின்விளக்குகளால் கட்டிடம் அலங்கரிங்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

இதையும் படிக்க : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி..! காரணம் என்ன?