மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான தனி மருத்துவப்பிரிவு... மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்...

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான தனி மருத்துவப்பிரிவு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான தனி மருத்துவப்பிரிவு... மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்...
முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக திருவாரூர் சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றடைந்தார். திருவாரூரை அடுத்த காட்டூரில் அமைந்துள்ள, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர், அப்பகுதியில் நடைபெற்று வரும் கலைஞர் அருங்காட்சியகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். 
 
அதனைத் தொடர்ந்து சன்னதி தெருவில் உள்ள மறைந்த முதல்வர் கருணாநிதியின் வீட்டில் ஓய்வெடுத்து வரும் முதலமைச்சர், இன்று காலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், 10 புள்ளி 5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்துப் பார்வையிட உள்ளார்.  
 
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை மீண்டும் சென்னை திரும்ப உள்ளார்.