பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள்...! நாளை நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டம்...!

பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள்...! நாளை நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டம்...!

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்து அதிகாரிகளுடன், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த நாட்களில், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவிழா நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க ஒவ்வொரு முறையும், மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  

இந்நிலையில் வருகிற 24 - ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறைகளால் லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். தரப்பு[ஒத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு பேருந்துகள் இயக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நாளை காலை சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்..