இன்று இவர்களுக்கு மட்டும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்!

அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கு தமிழ் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இன்று இவர்களுக்கு மட்டும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்!

அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கு தமிழ் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதலாக தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு வரும் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 69 லட்சத்து 21 ஆயிரத்து 705 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது கொரோனா தடுப்பூசி தமிழகத்தில் கையிருப்பில் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த தடுப்பு முகாமில் இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்த வரும் பத்திரிக்கையாளர்கள் அவர்களது நிறுவனத்தின் அடையாள அட்டையும், ஆதார் கார்டையும் கொண்டு வருவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.